Thursday 19 November 2015



மாவீரர் நாள்நினைவுகள் 


மாவீரர் வாரம் ஆரம்பமாகி விட்டது . சத்திய இலட்சியத்துக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது நெஞ்சமெல்லாம் வீற்று இருக்கும் எமது மாவீர செல்வங்களை போற்றி வணங்க உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தயாராகி விட்டனர் . 



வரலாறு மனிதர்களை பிறப்பித்துக் கொண்டே இருக்கின்றது . ஆனால் வெகு சிலர் தான் வரலாற்றை படைக்க பிறப்பெடுப்பார்கள் . ஆம் எமது மாவீர செல்வங்கள் வரலாற்றை படைக்க உருவெடுத்த்வர்கள் , எம் தேச விடுதலைக்காக இன்று வரலாறானவர்கள். 

எனது நலன்எனது குடும்பம் எனது வீடு என்று நாம் இருக்க . எமது நாடு , எமது இனம் , எமது விடுதலை என்று வாழும் வயதில் சாவை நஞ்சு மாலையை கழுத்தில் அணிந்து தாயகத்துக்காக சாவை அணைக்க துணிந்தவர்கள் . 




அப்போது ஈழத்தில் இருந்த போது மாவீர வாரம் ஆரம்பித்தாலே சோகத்தோடு கூடிய வீரம் மனதில் பிறக்கும் . அப்போது கிளிநொச்சியில் வசித்து வந்ததால் மாவீரம் வாரம் ஆரம்பித்தாலே தெருவெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள், மாவீரர் புகழ் பாடும் நுழைவு வாயில்கள் என எங்கும் எதிலும் மாவீரர்கள் நிறைந்து இருப்பார்கள் .



இன்று ஈழத்தில் மாவீர செல்வங்ககளின் நினைவகங்கள் எதுவும் இல்லாத போதும் எமது மாவீர செல்வங்களை எமது இதயத்தில் வைத்து போற்றி வணகுவோம் . இந்த நிலைமை மாறும் .  விரைவில் தமிழ் ஈழம் எங்கும் துயிலுமில்லங்களில்எமது மாவீர செல்வங்ககளை வணங்கும் காலம் விரைவில் வரும் . மீண்டும் மாவீரர் நாளில் " எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே " என்ற தேசிய தலைவனின் குரல் தமிழ் ஈழம் எங்கும் ஓங்கி ஒலிக்கும் காலம் வரும் .

 அதுவரை துயில் கொள்ளுங்கள்செல்வங்களே ...  உங்கள் கனவுகள் ஒரு நாள் நனவாகும் நாள் வரும் .  அந்த நாளில் வானத்து நட்ச்சதிரங்களாக இருந்து தமிழீழ வானில் பட்டொளி வீசி பறக்கும் புலிக்கொடியினை பாருங்கள் ...!

தமிழரின் தாகம் தமிழீழ தாகம்



No comments:

Post a Comment