Saturday 23 May 2015

டிமான்டி காலனி - சினிமா விமர்சனம்


வழக்கமாக வார வாரம் வெளியாகும் திரைப்படங்களை அந்த வாரமே பார்த்துவிடுவதுஎம் நண்பர்குழுவினரின் வழக்கம் . அதே போல இந்த இந்த படத்துக்கு போகலாம் என்று மாலை முடிவு பண்ணி சங்கம் தியேட்டரில் இரவு காட்சி சென்றோம் .

பெரிதாய் எதிர்ப்புகள் இல்லாமல் தான் இந்த படத்துக்கு சென்றோம் . அதிலும் இதுவும் பேய் படம் என்று அறிந்த போது பத்தோடு பதினொன்றாக தான இந்த படத்தையும் னியாநிது சென்றேன் , அனால் அது தவறு என்று படம் ஆரம்பித்த பதினைந்து நிமிடங்களிலேயே புரிந்தது
இயக்குனர் மிரட்டி விட்டார் .


சரி படத்தின் கதை என்ன ....?

அருள்நிதியும்  அவரின் மூன்று நண்பர்களும் பட்டினப்பாக்கம் அரசினர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர் . அதில் ஒருவர் இயக்குனராக முயற்சித்து வருகின்றார், அவரிடம் ஒரு பேய் கதை உள்ளது அதை இன்னும் மெருகூட்ட பேய்கள் குறித்து ஆய்வுகள் செய்து வருகின்றார்

ஒரு நாள் இரவு வேலை நன்றாக தண்ணியடித்து விட்டு வீட்டுக்கு போகும் வழியில் அந்த இயக்குனர் நண்பரின் பேச்சினை கேட்டு டிமான்டி காலனி எனும் பேய் வீட்டுக்குள் நுழைகின்றனர் . அங்கு ஏற்படும் சில அமானுஷயமான சம்பவங்களை அடுத்து வீடு திரும்புகின்றனர் . அந்த இயக்குனர் நண்பர் அந்த பேய் வீட்டில் இருந்து ஒரு செயினை எடுத்துக் கொண்டு வருகின்றார் .

அந்த இரவில் இருந்து ஆரம்பமாகின்றது பேய்களின் அதகளம் . அடுத்த நாள் இரவு மீதும் தண்ணியடித்து விட்டு எதாவது பேய் படம் பார்க்கலாம் என்று முடிவு பண்ணி ஒரு பேய் படத்தை போடுகின்றனர் ., ஆனால் எதிர்பாராத அதிர்ச்சியாக அவர்கள் போட்ட படத்தை விட்டு அவர்கள் நான்கு பேரின் காட்சிகளும் திரையில் வருகின்றது . அதில் மூன்று நண்பர்களும் அந்த பேயினால் கொல்லப்பட அருள்நிதி மட்டும் தப்பிப்பதாக அந்த படம் முடிகின்றது .

அலறி அடித்து கொண்டு டிவியை அணைக்க போனால்
டிவியை அணைக்க முடியவில்லை.  வீட்டின் கதவையையும் திறக்க முடியவில்லை . நண்பர்கள் குழுவை ஒவ்வொருஒவ்வொருவராக வரிசையாக தீர்த்துக்கட்ட முயல்கிறது அந்த பேய்.

இதில் இருந்து அருள் நிதியும் அவரின் நண்பர்களும் தப்பினார்களா இல்லையா என்பதை வெண்திரையில் கண்டு களியுங்கள் .

சும்மா சொல்ல கூடாது ஒரு அட்டகாசமான திரில்லர் மூவியை காண வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக தவற விடக்கூடாத படம் இது . படத்தில் ஏகப்பட்டட்விஸ்ட்கள் உள்ளன . படத்தின் சுவாரஸ்யம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக இதோடு முடித்துக் கொள்கின்றேன் .

டிமான்டி காலனி - அட்டகாசமான திரில்லர்

Thursday 21 May 2015

எனது அன்புக்கும் மதிப்புக்கும்உரிய தமிழீழ மக்களே ....!

எமது போராட்ட வரலாறு இன்று என்றும் இல்லாத அளவு ஒரு மாபெரும் சர்வதேச அரசியல் சதி வழியில் சிக்கி சீரழிந்து கொண்டுள்ளது. .

எண்ணற்ற மாவீர செல்வங்களின் உயிர் தியாகங்களை விலையாக கொடுத்து கட்டி எழுப்பிய எமது விடுதலை போராட்டம் இன்று ஒரு ஆபத்தான கட்டத்தில் உள்ளது .

எமது தேசத்தின் விடுதலையை உயிர் மூச்சாக கொண்டு போராடி வீழ்ந்த எம் வீர மறவர்களின் கனவை தோடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டிய  கடமை கொண்ட எமது தேசத்தின் இளைய தலைமுறை அவற்றை எல்லாம் மறந்து சிங்கள அரச பேரினவாதத்தின் சதி வழியில் சிக்கி எமது போராட்டத்தின் பாதையில் இருந்து விலகி தவறான பாதியில் திசை திரும்பியுள்ளனர் .

வீரத்துக்கும் ஏகத்துக்கும் பெயர் போன எம்து ஈழ தேசம்  இன்று மதுவுக்கும் காலாச்சார சீரழிவுகளின் எச்சங்களுக்கும் அடிமையாக தொடக்கி உள்ளது .

எமது மாவீர செல்வங்கள் கண்ட கனவை வெறும் கனவாகவே கலைத்து விடாதீர்கள் தோழர்களே

விழித்தெழுங்கள் இது தான் தருணம் .