Wednesday 25 November 2015

உலகத்தில் எந்த புரட்சியாளனுக்கும் சற்றும் குறைவு இல்லாத தலைவன் பிரபாகரன்

 


சீனா நாட்டின் விடுதலைக்கு போராடிய மாசே துங் அருகிலே இருக்கிற நாடுகளின் ஆதரவை பெற்று, தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பாதுகாப்பாக இருந்து, தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு


வியட்நாம் நாட்டின் விடுதலைக்கு போராடிய ஹோ சி மின், பல அயல் நாட்டின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.


கியூபா விடுதலைக்கு போராடிய பிடெல் காஸ்ட்ரோ, சே குவேரா , தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பாதுகாப்பாக இருந்து, பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.


பாலஸ்தீன விடுதலைக்கு போராடிய யாசர் அராபத் , தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு


இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பல்வேறு நாடுகளின் ராணுவ உதவியை பெற்று போராடியது வரலாறு


ஆனால்


உலகத்தில் எந்த நாட்டு ஆதரவும் இல்லாது, தான் பிறந்த தமிழீழ நாட்டை தவிர வேறு எங்கும் கால் பாதிக்காது, தன் சொந்த நாட்டு மக்களையே படையாக திரட்டி தன் தாயக விடுதலைக்கு போராடிய உலகத்திலே ஒரே புரட்சியாளன் மேதகு வே.பிரபாகரன் அவர்களே.





Thursday 19 November 2015



மாவீரர் நாள்நினைவுகள் 


மாவீரர் வாரம் ஆரம்பமாகி விட்டது . சத்திய இலட்சியத்துக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது நெஞ்சமெல்லாம் வீற்று இருக்கும் எமது மாவீர செல்வங்களை போற்றி வணங்க உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தயாராகி விட்டனர் . 



வரலாறு மனிதர்களை பிறப்பித்துக் கொண்டே இருக்கின்றது . ஆனால் வெகு சிலர் தான் வரலாற்றை படைக்க பிறப்பெடுப்பார்கள் . ஆம் எமது மாவீர செல்வங்கள் வரலாற்றை படைக்க உருவெடுத்த்வர்கள் , எம் தேச விடுதலைக்காக இன்று வரலாறானவர்கள். 

எனது நலன்எனது குடும்பம் எனது வீடு என்று நாம் இருக்க . எமது நாடு , எமது இனம் , எமது விடுதலை என்று வாழும் வயதில் சாவை நஞ்சு மாலையை கழுத்தில் அணிந்து தாயகத்துக்காக சாவை அணைக்க துணிந்தவர்கள் . 




அப்போது ஈழத்தில் இருந்த போது மாவீர வாரம் ஆரம்பித்தாலே சோகத்தோடு கூடிய வீரம் மனதில் பிறக்கும் . அப்போது கிளிநொச்சியில் வசித்து வந்ததால் மாவீரம் வாரம் ஆரம்பித்தாலே தெருவெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள், மாவீரர் புகழ் பாடும் நுழைவு வாயில்கள் என எங்கும் எதிலும் மாவீரர்கள் நிறைந்து இருப்பார்கள் .



இன்று ஈழத்தில் மாவீர செல்வங்ககளின் நினைவகங்கள் எதுவும் இல்லாத போதும் எமது மாவீர செல்வங்களை எமது இதயத்தில் வைத்து போற்றி வணகுவோம் . இந்த நிலைமை மாறும் .  விரைவில் தமிழ் ஈழம் எங்கும் துயிலுமில்லங்களில்எமது மாவீர செல்வங்ககளை வணங்கும் காலம் விரைவில் வரும் . மீண்டும் மாவீரர் நாளில் " எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே " என்ற தேசிய தலைவனின் குரல் தமிழ் ஈழம் எங்கும் ஓங்கி ஒலிக்கும் காலம் வரும் .

 அதுவரை துயில் கொள்ளுங்கள்செல்வங்களே ...  உங்கள் கனவுகள் ஒரு நாள் நனவாகும் நாள் வரும் .  அந்த நாளில் வானத்து நட்ச்சதிரங்களாக இருந்து தமிழீழ வானில் பட்டொளி வீசி பறக்கும் புலிக்கொடியினை பாருங்கள் ...!

தமிழரின் தாகம் தமிழீழ தாகம்